சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை சுவையாக சிறு சிறு கதைகளாகப் படைத்திருக்கிறார். இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாய் அமைந்திருப்பது இந்தச் சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். சீட்டு, ரேஸ் ஆகியவற்றில் பைத்தியமான லக்ஷ்மியின் கணவரை அவள் அக்கா சாரதை தங்கள் நன்மை விரும்பும் உண்மை நண்பன் என்று அடுத்தடுத்து கடிதம் எழுதித் திருத்தும் கதை. அந்தக்கால குதிரைவண்டி , டிராம், மவுண்ட்ரோடு, திருவல்லிக்கேணி பற்றி இக்கதையில் அறியலாம்.
(Tags : Sreekanthan Punarjenmam Kalki Audiobook, Kalki Audio CD )