தவுல் கந்தப்பிள்ளை சொல்லும் உருக்கமான கதை. பிரம்மா கல்யாணி, மோகனம், செஞ்சுருட்டி சேர்த்து படைத்த வீணை பவானி மிராசுதார் கோபாலசாமியுடன் சினேகம் கொள்கிறாள். ரயில் விபத்தில் அவர் இறக்கவே மனைவி குழந்தைகளும் மிகவும் வருந்துகிறார்கள். நவராத்திரி கடைசி கச்சேரிக்கு வருமாறு அவள் கந்தப்பிள்ளைக்கு தெரிவிக்கிறாள். கச்சேரிக்கு முண்டாசு, பச்சை கண்ணாடி போட்ட மனிதரை பிள்ளை பார்க்கிறார். பவானியை கேவலமாக பேசி செல்கிறார். கச்சேரி முடிந்து வீடு சென்ற பவானி வைரம் பொடி செய்து குடித்து இறந்து விழுந்ததையும், சொத்தில் பாதி கோயிலுக்கும், மீதி மிராசுதாரர் குடும்பத்திற்கும் எழுதியுள்ளதை அவள் கடிதம் மூலம் அறிகிறார். பிள்ளை இறந்ததை சொன்னால் கோபாலசாமி வருந்தி குடும்பத்தை கவனிக்காமல் விடுவார் என்று சொல்லவில்லை என்று முடிக்கிறார்.
(Tags : Veenai Bhavani Kalki Audiobook, Kalki Audio CD )